Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

Advertiesment
ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

Siva

, ஞாயிறு, 17 நவம்பர் 2024 (08:15 IST)
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு வழக்கு பதிவு செய்தவுடன் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
நடிகை கஸ்தூரி சென்னையில் கடந்த 3ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இருப்பினும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டது.
 
மேலும், அவரிடம் விசாரணை நடத்த அவருடைய வீட்டிற்கு காவல் துறையினர் சென்றபோது, அவர் தலைமறைவானதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கஸ்தூரி முன்ஜாமின் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இதனை அடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக இருந்த நிலையில், அவர் ஹைதராபாத்தில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்ததாகவும், அவரை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..