Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேட்டிங் செயலி மூலம் பெண் மருத்துவருடன் நட்பு.. அந்தரங்க புகைப்படம் எடுத்து மிரட்டிய இளைஞர்..!

Mahendran
செவ்வாய், 24 ஜூன் 2025 (15:54 IST)
மும்பையில் ஒரு பெண் மருத்துவருக்கு நிகழ்ந்த சம்பவம், டேட்டிங் செயலிகளின் மறுபக்கத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 
 
டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான ஓர் இளைஞர்,  பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக சுரண்டி, கட்டாயக் கருக்கலைப்புக்கு வற்புறுத்தியதுடன், அவரது தனிப்பட்ட படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 27 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
 
அந்தேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் 28 வயது பெண் மருத்துவர், 2023ஆம் ஆண்டு 'டேட்டிங் ஆப்' மூலம் டோங்கரியை சேர்ந்த  இளைஞரை சந்தித்துள்ளார். இருவரும் சம்மதத்துடன் பழகி வந்த நிலையில், அந்த இளைஞர் ரகசியமாக பெண் மருத்துவரின் அந்தரங்கமான புகைப்படங்களை எடுத்துள்ளார்.
 
இந்த ஆண்டு பிப்ரவரியில் நிலைமை தலைகீழானது. அந்த பெண் கர்ப்பமான நிலையில், கருக்கலைப்பு செய்யுமாறு இளைஞர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் அந்த பெண் டாக்டரை சந்திப்பதையும் தவிர்த்துள்ளார்.. பின்னர், அந்த இளைஞருக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரியவந்ததும், திருமண வாக்குறுதி அளித்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் மருத்துவர் அதிர்ச்சியடைந்தார்.
 
அவர் காவல் நிலையத்தை அணுகி புகார் கொடுத்த நிலையில் , புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  கட்டாயக் கருக்கலைப்பு, குற்ற மிரட்டல், சுரண்டல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்யும் சிங்கள படை.. இன்று 7 பேர் கைது..!

ஐசிஐசிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் இனி ரூ.50,000.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

ரக்ஷா பந்தன் கொண்டாடிய ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி.. வைரல் புகைப்படம்..!

போதைப்பொருள் உற்பத்தி செய்ய ரகசிய ஆய்வகங்கள்.. மடக்கி பிடித்து கைது செய்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்