மும்பையின் பவரி பகுதியில் ஒரு நபர் 17 குழந்தைகளை பிணை கைதிகளாக பிடித்து வைத்திருந்த நிலையில், போலீசார் விரைந்து செயல்பட்டு அவர்களை வெற்றிகரமாக மீட்டனர்
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	மதியம் 1:45 மணியளவில் கிடைத்த தகவலின் பேரில், ரோஹித் ஆர்யா என்ற நபர் 17 குழந்தைகளை கடத்தி வைத்ததாக தெரிய வந்ததை அடுத்து மும்பை காவல்துறை விரைந்து செயல்பட்டது. குற்றவாளியுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, போலீசார் குளியலறை வழியாக வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து குழந்தைகளை வெற்றிகரமாக மீட்டனர்.
	 
	சம்பவத்திற்கு முன் வெளியிட்ட காணொளியில், நான் ரோஹித் ஆர்யா. தற்கொலை செய்து இறப்பதற்கு பதிலாக, நான் ஒரு திட்டத்தை தீட்டி, சில குழந்தைகளை பிணைக்கைதிகளாக வைத்துள்ளேன். எனது கோரிக்கைகள் எளிமையானது என்று சில கோரிக்கைகளை பட்டியலிட்டார்
	 
	காவல்துறை சிறிய தவறு செய்தாலும், அந்த இடத்திற்கே தீ வைத்துவிட்டு தானும் இறந்துவிடுவேன் என்றும் அவர் மிரட்டினார். தனக்கு பணம் தேவையில்லை என்றும், "நான் பயங்கரவாதி அல்ல" என்றும் ஆர்யா அந்த காணொளியில் வலியுறுத்தினார்.
	 
	தற்போது ரோஹித் ஆர்யா கைது செய்யப்பட்டு, பிணைக்கைதி விவகாரத்தின் நோக்கம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.