இந்தியாவில் வாகனங்களில் இந்திய இசையை ஹார்ன் ஒலியாக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் டூ வீலர் தொடங்கி கனரக வாகனங்கள் வரை ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இவற்றில் பொதுவாக ஒரு சில வகை சத்தங்கள் ஹார்ன் ஒலியாக பயன்படுத்தப்படுகின்றன. சில வாகனங்களில் இளைஞர்கள் சிலர் பயம் ஏற்படுத்துவது போன்ற சத்தங்களை ஹார்னாக பயன்படுத்துவதும் உண்டு.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்துவது குறித்து பேசியுள்ளார். அதன்படி, இந்திய வாகனங்களில் மிருந்தங்கம், புல்லாங்குழல், வீணை போன்ற இந்திய வாத்திய கருவிகளை இசையை ஹார்னாக பயன்படுத்த வழிவகை செய்யும் சட்டத்தை விரைவில் இயற்ற உள்ளதாக தெரிகிறது.
சும்மாவே சாலை முழுவதும் காது கிழியும் அளவுக்கு ஹார்ன் சவுண்ட் கேட்கும் நிலையில் இனி அவை இந்திய வாத்தியக் கருவிகளாக இசைத்து சாலையையே ஒரு இசை சங்கமாக மாற்றும் வாய்ப்பும் உள்ளது.
Edit by Prasanth.K