Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

Advertiesment
8வது ஊதியக் குழு

Siva

, திங்கள், 21 ஏப்ரல் 2025 (13:28 IST)
மத்திய அரசு, 8வது ஊதியக் குழுவை அமைக்கும் பணியை அதிகாரபூர்வமாக துவங்கியுள்ளது. இந்த குழு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றோரின் அடிப்படை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் பிறத் தொகைகளை 2026 ஜனவரி 1 முதல் மாற்றி நிர்ணயிக்க உள்ளது. நிதியமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய ஊதிய மாற்றத்தால் சுமார் 47.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியர்கள் என மொத்தமாக 116 லட்சம் பேர் பயனடைவார்கள். குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்றும், அந்தத் தேதி முதல் நிலுவை தொகைகள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அடிப்படை ஊதியம், வீட்டு வாடகை தொகை (HRA), காலநிலை இழப்புத்தொகை (DA), மற்றும் ஓய்வூதியத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன.  இதனால், ரூ.50,000 அடிப்படை ஊதியம் இருப்பவருக்கு புதிய ஊதியம் ரூ.1,42,500 ஆக உயரக்கூடும். 30% HRA இணைந்து, மொத்த ஊதியம் ரூ.1,57,500 வரை ஆகலாம்.
 
மேலும், DA-வை அடிப்படை ஊதியத்தில் இணைப்பதையும் அரசு பரிசீலித்து வருகிறது. இது ஊதிய அமைப்பை எளிதாக்கும் என்றும், பிறத் தொகைகளையும் பாதிக்கலாம். ஓய்வுபெற்றோர் அமைப்புகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஓய்வூதிய முறைகளிலும் மேம்பாடுகள் பரிந்துரை செய்யப்படும்.
 
2026ஆம் ஆண்டு தமிழகம் உள்பட சில மாநிலஙக்ளில் நடக்கும் தேர்தலையொட்டி, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஆதரவை பெறவே இந்த நடவடிக்கை என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?