திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரது எம்பி பதவியை பறிக்க நாடாளுமன்ற நெறிமுறைக் குழு பரிந்துரை செய்து சபாநாயகர் இடம் இன்று அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் நாடாளுமன்றம் தொடங்கும் போது அதானி, அம்பானி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விகள் உள்நோக்கமானது என ஆளுங்கட்சி பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ரா அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியது சமீபத்தில் தெரியவந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவரது எம்பி பதவியை பறிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நெறிமுறை குழு உறுப்பினர்களில் ஆறு பேர் அவரை பதவி நீக்குவதற்கு ஆதரவாகவும் 4 பேர் எதிர்ப்பும் தெரிவித்து வாக்களித்து உள்ளதை அடுத்து சபாநாயகர் இடம் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது