Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடிகர் மம்மூட்டியின் தபால் தலை வெளியீடு!

Advertiesment
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடிகர் மம்மூட்டியின் தபால் தலை வெளியீடு!
, வெள்ளி, 20 அக்டோபர் 2023 (07:57 IST)
மலையாள சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர் தன்னுடைய 71 ஆவது வயதிலும் இப்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார். மலையாளம் தவிர பிற தென்னிந்திய மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கௌரவம் அளிக்கும் விதமாக தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இந்த முன்னெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்ற நண்பர்கள் என்ற குழுவின் சார்பாக 10 ஆயிரம் மம்மூட்டி படம் பொறித்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் இந்திய தூதர் மன்ப்ரீத் வோராவிடம் முதல் தபால் தலையை இந்திய நாடாளுமன்ற நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஆண்டனி அல்போசீன் வெளியிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி விஜய்யின் ‘லியோ’ விமர்சனம்.. படம் தேறுமா?