ராமர் கோவில் பணிகள் தொடங்கும்போது கொரோனா முடியும்! – பாஜக தலைவர் கருத்து!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (12:46 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும்போது முடியும் என மத்திய பிரதேச பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் 12 லட்சத்தை தாண்டியுள்ளன. இதுவரையிலும் அதிக பாதிப்புகளை கண்டு வந்த தமிழகம் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலைமை கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்டு 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. ராமர் கோவில் கருவறையில் வெள்ளி செங்கல் பொருத்துவதற்காக இந்திய தங்க சங்கம் கிலோ கணக்கில் வெள்ளியை நன்கொடையாக அளித்துள்ளது. ஆகஸ்டு 5ல் நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைக்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராமர் கோவில் பணிகள் குறித்து பேசியுள்ள மத்திய பிரதேச பாஜக தலைவர் ராமேஸ்வர சர்மா “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டவுடன் இந்தியாவில் கொரோனா வைரஸ் குறையும். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், புனித நபர்களையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments