உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர், தான் பெற்ற 15 நாள் பச்சிளங்குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது, குழந்தையின் தாய் அதை எடுத்து குளிர்சாதன பெட்டிக்குள் வைத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் குளிர் தாங்காமல் குழந்தை அழும் சத்தத்தை கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை வீடு முழுவதும் தேடினர். அப்போது, குளிர்சாதன பெட்டியைத் திறந்து பார்த்தபோது, குழந்தை அதற்குள் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக குழந்தை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் தாய்க்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் அவ்வப்போது இதுபோன்ற விபரீதமான செயல்களில் ஈடுபடுவார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.