Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகளுக்கு மயக்க மாத்திரை கொடுத்து விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை.. மாமியார் கைது..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (11:36 IST)
மருமகளுக்கு மயக்க மாத்திரை கொடுத்து விபச்சாரத்தில் தள்ளிய மாமியாரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி சந்து என்பவரை காதலித்த நிலையில், பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், தங்கள் மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், சிறுமியை மீட்ட காவல்துறை. அவரை திருமணம் செய்த சந்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், சிறுமியை அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முயன்ற போது, பெற்றோர்கள் தங்கள் மகளை ஏற்க முடியாது என்று அறிவித்து விட்டனர். இதையடுத்து, சிறுமியை சந்துவின் தாயார்  நீலிமா என்பவரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், மாமியார் நீலிமா தனது மருமகளுக்கு மயக்க மாத்திரைகள் கொடுத்து விபச்சாரத்தில் தழுவியதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளை மீட்டு காவல் துறையில் புகார் அளித்த நிலையில், தற்போது மாமியார் நீலிமா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினரை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments