Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாய், மகளை கற்பழித்து எரித்துக்கொலை செய்த மர்ம கும்பல்....

தாய், மகளை கற்பழித்து எரித்துக்கொலை செய்த மர்ம கும்பல்....
, வியாழன், 8 பிப்ரவரி 2018 (16:48 IST)
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் தாய் மற்றும் மகளை கற்பழித்து கொன்ற கும்பல், அவர்களை உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
அமிர்தசரஸில் வசித்து வருபவர் ககன்தீப் வர்மா(41). அவருக்கு ஷிவ்னைனி வர்மா(21) என்கிற மகளும் ஒரு மகனும் உள்ளனர்.
 
ககன்தீப் வர்மா ஒரு பள்ளியில் ஆசிரையையாக பணிபுரிந்து வருகிறார். ஷிவ்னைனி சமீபத்தில்தான் பி.காம் பட்டப்படிப்பை முடித்துள்ளார். நேற்று முன் தினம் அவர்கள் இருவரும் அவர்கள் வசித்து வரும் வீட்டில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
 
இதில், ககன்தீப்பின் உடல் முழுவதும் தீக்கு இரையாகி விட்டது. ஷிவ்னைனியின் உடல் 25 சதவீதம் எரிந்த நிலையில் கை, மற்றும் கால்கள் கட்டப்பட்டு இருந்தது. மேலும், அவர்கள் இருவர்களின் உடலிலும் ஆடைகள் இல்லை. எனவே, மர்ம கும்பல் அவர்களின் வீட்டில் நுழைந்து, அவர்களை கற்பழித்து விட்டு, தடயங்களை அழிப்பதற்காக அவர்களை எரித்து விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
 
நள்ளிரவு 2 மணியளவில் அவர்களின் வீட்டிலிருந்து வந்த புகை காரணமாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பின்னரே போலீசார் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

ககன்தீப் இருமுறை திருமணங்கள் செய்துள்ளார். ஆனால், இரண்டுமே தோல்வியில் முடிந்துள்ளது. எனவே, அவர் தன்னுடைய பிள்ளைகளுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். ககன்தீப்பின் மகன் சமீபத்தில் கனடா நாட்டில் வேலைக்கு சென்றார். 
 
இந்த சம்பவத்தில் 3 அல்லது 4 பேர் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. சம்பவம் நடந்த இரவு அவர்களின் வீட்டின் நாய் குறைக்கவில்லை. மேலும், வலுக்கட்டாயமாக யாரும் நுழைந்த அறிகுறியும் தென்படவில்லை. எனவே, அவர்கள் கண்டிப்பாக இரண்டு பெண்களுக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்களாகத்தான் இருக்க வேண்டும் என போலீசார் கருதுகிறார்கள்.
 
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதார் மூலம் தொடரும் கொள்ளை; இணை நிதியமைச்சர் அறிக்கை