Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மைசூர் சாமுண்டீஸ்வரியும் குடும்ப தலைவி தான், அவருக்கும் ரூ.2000 வழங்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எ.சி

Advertiesment
மைசூர் சாமுண்டீஸ்வரியும் குடும்ப தலைவி தான், அவருக்கும் ரூ.2000 வழங்க வேண்டும்: காங்கிரஸ் எம்.எ.சி
, ஞாயிறு, 19 நவம்பர் 2023 (12:32 IST)
கர்நாடக மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்பட்டு வரும் நிலையில் சாமுண்டீஸ்வரி கோவிலில் உள்ள சாமுண்டீஸ்வரி தெய்வமும் குடும்ப தலைவி தான் என்றும் அவருக்கும் 2000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும்   கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்சி தினேஷ் என்பவர் தெரிவித்துள்ளார். 
 
குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் 2000 உதவி தொகையை பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் கர்நாடகாவில் உள்ள அனைத்து குடும்பங்களின் தலைவியாக இருக்கிறார் என்றும் எனவே அவரையும் மாதந்தோறும் க்ருஹலட்சுமி திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.  
 
அவருடைய கோரிக்கையை கர்நாடக மாநில துணை முதல்வர் டி கே சிவக்குமார் ஏற்றுக்கொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் நிதி வழங்குமாறு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து கிரகலட்சுமி திட்டத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடலில் வெடித்து சிதறியது எலான் மஸ்க் நிறுவனம் அனுப்பிய ராக்கெட்: பெரும் அதிர்ச்சி..!