Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

58 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு..! தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு..!!

Advertiesment
Election Campaign

Senthil Velan

, வியாழன், 23 மே 2024 (13:32 IST)
58 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், முதல்கட்டத்தில் 66.14 சதவீதம், 2வது கட்டத்தில் 66.71 சதவீதம், 3வது கட்டத்தில் 65.68 சதவீதம், 4-ம் கட்டத்தில் 69.16 சதவீதம், 5-ம் கட்டத்தில் 60.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
 
இந்த நிலையில், ஆறாம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் மே 25- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை  6 மணியுடன் நிறைவடைகிறது.


பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!