Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவிகள் முதல் மூதாட்டி வரை; மந்திரவாதி ஷபி நடத்திய கொடூரங்கள்!

Advertiesment
Mohammed Shabi
, வெள்ளி, 14 அக்டோபர் 2022 (13:21 IST)
கேரளாவில் பெண்கள் இருவர் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மந்திரவாதி ஷமி குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

பணம், செல்வம் குவிய வேண்டுமென கேரள தம்பதி இருவர் மந்திரவாதி ஒருவருடன் சேர்ந்து பெண்களை நரபலி கொடுத்து, அந்த மனித கறியையும் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளான பகவந்த் என்னும் பகவல் சிங், அவரது மனைவி லைலா மற்றும் மந்திரவாதி முகமது ஷபி ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் சில திடுக்கிடும் சம்பவங்கள் தெரிய வந்துள்ளன.


முக்கியமாக நரபலிக்கு பெண்களை ஆசைக்காட்டி மயக்கி அழைத்து வந்த மந்திரவாதி முகமது ஷபி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். மந்திரவாதி ஷபி குறித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

கடந்த சில ஆண்டுகள் முன்னதாக லாரி டிரைவராக இருந்த முகமது ஷபி அப்போதே 75 வயது மூதாட்டி ஒருவரை கடத்தி சென்று கற்பழித்துள்ளான். அதோடு நிறுத்தாமல் அந்த மூதாட்டியின் பிறப்புறுப்பை கத்தியால் குத்தி காயப்படுத்தியும் உள்ளான். இதுகுறித்து ஷபி மீது ஏற்கனவே வழக்கு நடந்துள்ளது. தற்போது நரபலி கொடுக்கப்பட்ட பெண்கள் பிறப்புறுப்பிலும் இத்தகைய காயங்கள் காணப்படுவதாக தெரிகிறது.
webdunia

இதனால் சைக்கோ கில்லர்கள் ஒரே மாதிரியான துன்புறுத்தல் முறைகளை தொடர்வது போல ஷபியும் செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஒரு பெண்கள் விடுதி அருகே உணவகம் நடத்தி வந்த ஷபி அங்குள்ள சில பெண்களிடம் நெருங்கி பழகியதும், அவர்களை பகவந்த்தின் வீட்டுக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அப்போது ஷபி கூட வேறு ஒரு நபரும் இருந்ததாக கூறப்படுகிறது.


இதுதவிர பேஸ்புக்கில் ஸ்ரீதேவி என்ற போலி கணக்கை உருவாக்கி பலருடன் பேசி வந்துள்ளான் ஷபி. அப்போதுதான் பகவந்த் இவனுக்கு பழக்கமாகி உள்ளார். அதன்பின்னர் பகவந்த் தம்பதியினரை மயக்கி நரபலி நாடகத்தை அரங்கேற்றியுள்ளான் ஷபி. அந்த போலி கணக்கில் யாரிடமெல்லாம் ஷபி பேசினான் என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இளம்பெண்கள் முதல் மூதாட்டி வரை அனைவர் மீதும் இவ்வளவு கொடுமைகளை செய்துள்ள ஷபிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணமாகி ஷபிக்கு ஒரு பேத்தியும் உள்ளார். வெளியே பொறுப்பான குடும்ப தலைவனாக, அப்பாவாக, தாத்தாவாக காட்டிக் கொண்டு மறைமுகமாக இவ்வளவு பெரிய கொடூரத்தை மந்திரவாதி ஷபி அரங்கேற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு!