வங்கதேச அரசியலில் ஏற்பட்ட நெருக்கடி நிலைக்கு முடிவு கட்டும் வகையில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
வங்கதேசத்தில் திடீரென ஏற்பட்ட மாணவர்கள் போராட்டம் மத போராட்டமாக மாறி இந்துக்கள் தாக்கப்படுவதாகவும் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்டார் என்பதும் அவர் விரைவில் லண்டனில் சென்று அவருடைய சகோதரியுடன் செட்டிலாக போவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வங்கதேச அரசியலில் ஏற்பட்ட நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை அடுத்து வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் போராட்ட குழுவின் பிரதிநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது நியமனம் வங்கதேச அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.