நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என மு.க.ஸ்டாலின் கூற, மு.க.ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என ராகுல்காந்தி கூற இரு கட்சிகளின் தொண்டர்களும் உற்சாகமானார்கள்.
ஓட்டு போட வேண்டிய மக்கள் அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்து வரும் நிலையில் இருவரும் மாறி மாறி பதவியை பரிமாறி கொண்டதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறும் சில மணி நேரங்களுக்கு முன் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் உள்பட முன்னணி அரசியல்வாதிகளுக்கு பிரதமர் மோடி ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியபோது, 'இந்தியாவின் மிகவும் உயர்ந்த மனிதர் மற்றும் பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் உங்களுக்கு தெரியும் வாக்கின் சக்தி. ஜனநாயகத்தின் திருவிழாவான தேர்தலில் அதிகளவில் மக்கள் கலந்து கொள்ள அவர்களை உற்சாகப்படுத்தும்படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என்று மோடி டுவிட் செய்து இருந்தார்.
இந்த டுவீட்டை மோடி, 'பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சச்சின், அனில் கும்ப்ளே, வி.வி.எஸ்.லட்சுமணன், சேவாக், தீபிகா படுகோன், அலியா, அனுஷ்கா சர்மா, விராட் கோலி, அக்சய் குமார், அகிலேஷ் யாதவ், மாயாவதி மற்றும் ஸ்டாலின் உள்பட பல முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.