Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகமே எதிர்பார்த்த ...இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார் ’மோடி ’

Webdunia
வியாழன், 30 மே 2019 (19:14 IST)
இந்தியாவின் 17 வது மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரமராக இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், மாநில தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டனர். 
நம் நாட்டின் குடியரசு தலைவர் மற்றும் முதல்குடிமகனான  ராம் நாத் கோவிந்த் மேடையில் நின்று அழைக்க ..கெம்பீரமாக நடந்துவந்த மோடி மைக்கின் முன்னால் நின்றுகொண்டு இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்.  மோடிக்கு குடியரசு தலைவர்,  பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
 
அப்போது அங்கு எட்டுத்திக்கும் அமர்ந்திருந்த ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கூச்சலிட்டு கரகோஷம் எழுப்பினர்.
 
தற்போதுடெல்லியில் நடைபெறவுள்ள மோடியில் பதவியேற்பு விழாவில் பல்வேறு தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
 
 முன்னதாக தற்பொழுது புதிய அமைச்சர்களாக பதவியேற்கப்போகிற எம்.பிக்களுக்கு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் தேனீர் விருந்து நடைபெற்றது. இதில் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 
 
இப்போது மோடியின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளவர்கள் ஒவ்வொருவராக வந்து குடியரசு தலைவர் பதவிபிரமாணம் செய்துவைக்க பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
 
இவ்விழாவில்  தற்போது தமிழ் சினிமாவின்  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் உற்சாகத்துடன் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
 
முக்கியமாக தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனிய காந்தி இவ்விழாவிற்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments