Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் தற்காலிகம் என்ற வார்த்தைக்கு அனுமதி இல்லை – பிரான்ஸில் மோடி பேச்சு !

இந்தியாவில் தற்காலிகம் என்ற வார்த்தைக்கு அனுமதி இல்லை – பிரான்ஸில் மோடி பேச்சு !
, சனி, 24 ஆகஸ்ட் 2019 (09:36 IST)
ஜி 7 மாநாட்டுக்காக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள இந்தியர்களிடம் கலந்துரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளில் 5 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நேற்று முந்தினம் அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு சென்றார். அதன் பின்பு பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு இருதரப்பிலும் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பின் அங்கு நடக்க இருக்கும் ஜி 7 மாநாட்டிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.

இதற்கிடையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் யுனெஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்களை சந்தித்தார். அப்போது அவர்களிடம் பேசிய மோடி ‘நீங்கள் அனைவரும் தொடர்ந்து இந்தியாவின் குரலாக ஒலிக்க வேண்டும். நான் எப்போதும்  சொல்வது போல தற்காலிகம் என்ற வார்த்தைக்கு இந்தியாவில் இடமில்லை. காந்தி, புத்தர், ராமர், கிருஷ்ணர் என வரலாற்றுச் சிறப்புமிக்க 120 கோடி பேர் வசிக்கும் நாட்டில் தற்காலிகம் என்ற வார்த்தையை நாம் அகற்றுவதற்கு நமக்கு 70 ஆண்டுகள் ஆகியுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

மோடியின் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான 370-ஐ நீக்கியதைப் பற்றி குறிப்பிட்டுதான் இவ்வாறு பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்: மீட்பு பணிகள் தீவிரம்