அயோத்தி தீர்ப்பால் இந்தியா புதிய வரலாற்றை படைத்துள்ளதாக பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.
அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு, மசூதி கட்டுவதற்கு இஸ்லாமியர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என உத்திர பிரதேச மாநில அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வரும் பிரதமர் மோடி, “அயோத்தி தீர்ப்பு புதிய இந்தியாவை வழிவகுக்கும் தீர்ப்பு. இதனால் மக்களுக்கு நீதி நியாயம் மீது நம்பிக்கை வலுத்துள்ளது” என கூறினார்.
மேலும், மக்களாட்சி இந்தியாவில் வலிமையாக செயல்பட்டு வருகிறது. இந்த தீர்ப்பால் இந்தியா புதிய வரலாற்றை படைத்துள்ளது வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த தினம் சிறந்த உதாரணம்” என பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.