Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள்: பிரதமர் மோடி X தளத்தில் பதிவு..!

Siva
புதன், 10 செப்டம்பர் 2025 (09:19 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 50% வரி விதித்துள்ள நிலையில், விசா கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில், 100% வரி விதிப்பேன் என்று மிரட்டி வரும் நிலையில்  இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் என பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் ட்ரம்ப்பிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் உள்ளேன். இந்திய - அமெரிக்க மக்களின் ஒளிமயமான, செழிப்பான வளர்ச்சியைப் பாதுகாக்க நாம் இணைந்து பணியாற்றுவோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரதமரின் இந்த நட்புறவு பதிவு ஒருபுறம் இருக்க, மறுபுறம் அமெரிக்கா இந்தியர்களுக்கு விசா பெறுவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இனி தங்கள் சொந்த நாட்டிற்கு வந்துதான் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வெளிநாடு வாழ் இந்தியர்களை பெரிதும் பாதித்துள்ளது.
 
இந்த புதிய விதிமுறைகள், பிரதமர் மோடியின் நட்புறவு செய்தியும், டிரம்ப் அரசின் கடுமையான விசா கட்டுப்பாடுகளும் ஒரே நேரத்தில் வெளியானது, இந்தியா-அமெரிக்கா உறவில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் 18 வயது மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை: நண்பர்களே ஆபாச வீடியோ மிரட்டல்: முக்கிய குற்றவாளி தலைமறைவு!

ஒடிசாவில் திடீரென இணையதளத்தை கட் செய்த அரசு.. என்ன காரணம்?

தீர்ப்பு கொடுத்ததற்காக விமர்சிக்கின்றனர்! விஜய் ரசிகர்களை மறைமுகமாக பேசிய நீதிபதி!

கரூர் சம்பவம் எதிரொலி! பிரச்சாரக் கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்! - அரசு பரிசீலனை!

துர்கா சிலை ஊர்வலத்தில் விபரீதம்.. 2 பக்தர்கள் பரிதாப பலி: மத்தியப் பிரதேசத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments