சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் மோடி மற்றும் சீன பிரதமரின் சந்திப்பு எதிர்பாராத ஒன்றாகவுள்ளது.
சீனாவின் அத்து மீறல்களுக்கு பதிலடியாக இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை குவித்து உள்ளது. ஆனால் சீனா, இந்திய ராணுவத்தை விலக்கிக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இதனால் எல்லையில் போர்பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு ஜெர்மனியின் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மோடி ஜெர்மனி சென்றுள்ளார்.
ஜி 20 மாநாட்டுக்கு இடையே மோடி- சீன அதிபர் கிசி ஜின்பிங் சந்தித்து பேசும் திட்டம் இல்லை என மத்திய அரசு கூறியிருந்தது. இதையே தான் சீன அரசும் தெரிவித்திருந்தது.
ஆனால், இவை அனைத்திற்கும் மாறாக ஜி 20 மாநாடு கருத்தரங்கம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியும், சீனா அதிபர் கிசி ஜின்பிங்கும் எதிர்பாராத விதமாக சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.