Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆகக்கூடாது.. செக் வைக்கிறாரா சந்திரபாபு நாயுடு?

Advertiesment
Chandra Babu Naidu

Siva

, புதன், 5 ஜூன் 2024 (08:28 IST)
பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் படி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்றும் கூட்டணி ஆட்சி தான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பாஜக தன்னுடைய கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகிய இருவரது கட்சியின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே சந்திரபாபு நாயுடு சொல்லும் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது என்றும் குறிப்பாக அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆக கூடாது, அவருக்கு வேறு துறை கொடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதித்திருப்பதாக தெரிகிறது.

நிதித்துறை, உள்துறை ஆகிய இரண்டு அமைச்சர் பதவியும் தெலுங்கு தேசம் கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்றும் ஆந்திராவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை சந்திரபாபு நாயுடு விதித்திருப்பதாக கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடுவின் நிபந்தனைகளை மோடி மற்றும் அமித்ஷா ஏற்றுக்கொண்டு ஆதரவை பெறுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேபோல் நிதீஷ்குமார் தரப்பில் இருந்து துணை பிரதமர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வந்திருப்பதாக கூறப்படுவதால் கூட்டணி ஆட்சியை 5 வருடங்கள் மோடி மற்றும் அமித்ஷா எப்படி கொண்டு செல்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

40 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி.. ஆனாலும் 6 தொகுதிகளில் 3வது இடம்..!