Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாஜ்பாய் இறுதி ஊர்வலம்: ஸ்மிருதி ஸ்தலம் வரை நடந்தே வந்த மோடி

Advertiesment
வாஜ்பாய் இறுதி ஊர்வலம்: ஸ்மிருதி ஸ்தலம் வரை நடந்தே வந்த மோடி
, வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (16:00 IST)
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் நேற்று மாலை மரணமடைந்தார். இரவில் டெல்லியிலுள்ள அவரது இல்லத்திற்கு வாஜ்பாய் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 
பின்னர் பொதுமக்களும், முக்கிய தலைவர்கலும் அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக அலுவலகத்தில் அவரது உடல் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்தது. 
 
இவரது இறுதி ஊர்வலம் பாஜக அலுவலகத்தில் இருந்து ராஜ்காட்-விஜய்காட் பகுதிக்கு கிளம்பியது. அங்கு உள்ள ஸ்மிருதி ஸ்தலம் பகுதியில் வைத்து வாஜ்பாய்க்கு இறுதி சடங்குகள் நடைபெற்று வருகிறது. 
 
பாஜக அலுவலகத்திற்கும் ராஷ்டிரிய ஸ்மிருதி ஸ்தலத்திற்கும் இடையே உள்ள 4 கீமி தூரத்திற்கு மோடியும், அமித்ஷாவும் தொண்டர்களோடு தொண்டர்களாக நடந்தே சென்றனர். 
 
தங்கள் தலைவர் வாஜ்பாய் மீது வைத்திருந்த அளப்பறிய மரியாதை காரணமாக, காரை தவிர்த்துவிட்டு மோடியும், அமித்ஷாவும் நடந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவிய தினகரன் கட்சியினர் (வீடியோ)