Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஜ்பாய் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி உட்பட தமிழக தலைவர்கள் நேரில் அஞ்சலி

வாஜ்பாய் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி உட்பட தமிழக தலைவர்கள் நேரில் அஞ்சலி
, வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (08:41 IST)
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி உட்பட தமிழக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பல்வேறு தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வந்தனர்.  பாஜகவும் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்தது. 
 
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 5.05 மணிக்கு மரணமடைந்தார். வாஜ்பாய் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
 
காலை 9 மணிக்கு வாஜ்பாய் உடல் பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் விஜய்காட் பகுதியில் மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.  
 
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை ஆகியோர் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 
 
பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு மிகச் சிறந்த அரசியல்வாதியும், பேச்சாளரும், எழுத்தாளரும் மேலும் பன்முகத் திறமை கொண்ட மாபெரும் தலைவர்  வாஜ்பாய் அவர்களுக்கு தமிழக அரசு சார்பாக ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாக கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேவலம் மரணத்திற்கு பயப்படுபவன் நானல்ல - வாஜ்பாயின் மரண கவிதை