Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் மொபைல் வாங்கினால் 10% தள்ளுபடி: ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (09:04 IST)
பெண்கள் மொபைல் வாங்கினால் 10% தள்ளுபடி
மகளிர் தினத்தில் பெண்கள் மொபைல் வாங்கினால் 10% தள்ளுபடி என ஆந்திர மாநில முதல்வர் ஜெகநாதன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து அவர் இந்த சலுகையை அறிவித்து உள்ளார்
 
மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடுவதை அடுத்து ஆந்திராவில் மார்ச் 8ஆம் தேதி மொபைல் வாங்கும் பெண்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி என்றும் எட்டாம் தேதி ஒரு நாள் மட்டும் இந்த சலுகை இருக்கும் என்றும் இந்த சலுகையை பயன்படுத்தி பெண்கள் மொபைல்போன் வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பெண்கள் புதிதாக வாங்கும் மொபைல் போன்களில் பாதுகாப்புக்கான திஷா என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அதனை ஊக்குவிக்கும் வகையில் தான் மாநில அரசின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் மகளிர் தினத்தை ஒட்டி ஆந்திராவில் மார்ச் 8ஆம் தேதி பெண் காவலர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெகநாதன் ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments