கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது மூத்த பத்திர்க்கையாளராக இருந்தவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதனால் இந்த குற்றசாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். என எதிர்கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் பாஜ.க.தலைவர்களில் ஒருவரான மேனகா காந்தியும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது : அதிகாரத்தில் கோலோச்சும் ஆண்கள் இதுபோன்று நடந்து கொள்கின்றனர். இவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வேண்டும் . முதலில் இந்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசவே பயந்த பெண்கள் இப்போது அச்சமின்றி பேச துவங்கியுள்ளனர் அது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறுயுள்ளார்.