மிசோரம் மாநிலத்தில் உள்ள நத்தியால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலியாகியுள்ள சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிசோரம் மாநிலத்தில், முதல்வர் சோரம்தங்கா தலைமையிலான மிஷோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள நத்தியால் மாவட்டம் மவ்தார் என்ற கிராமத்தில் ஒரு கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் வழக்கம் போல் பணியாளர்கள் பணி செய்து வந்தனர்.
அப்போது. திடீரென்று கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்தன. இதில், 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர், இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்புப் படையினர் இன்று காலையில் மீட்புப் பணியை ஆரம்பித்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 8 தொழிலாளர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 4 தொழிலாளர்களின் உடலை தேடும் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.