சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: மதபோதகர் ஆசாராம் பாபுவுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன்..!

Siva
வெள்ளி, 7 நவம்பர் 2025 (08:24 IST)
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மதபோதகர் ஆசாராம் பாபுவுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் 6 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 
ராஜஸ்தானில் ஒரு சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ஆசாராம் பாபு, குஜராத்தில் பெண் சீடர் ஒருவரை வன்கொடுமை செய்த வழக்கிலும் ஆயுள் தண்டனை பெற்றவர்.
 
இந்நிலையில் அவருக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற உடல்நல குறைபாடுகள்  காரணமாக சிறை மருத்துவமனையில் போதிய சிகிச்சை கிடைக்காததால் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இலேஷ் ஜே. வோரா மற்றும் ஆர்.டி. வச்சானி அடங்கிய அமர்வு, அவருக்கு 6 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமீன் காலத்தில் ஆசாராம் பாபு மத பிரசங்கங்கள் மற்றும் கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும், தொடர்ந்து காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
 
முன்னதாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும் அவருக்கு மருத்துவ அடிப்படையில் 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்