Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாவர்க்கரை மன்னிப்பு கடிதம் எழுத சொன்னதே காந்திதான்! – மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு!

Advertiesment
Savarkar
, புதன், 13 அக்டோபர் 2021 (08:21 IST)
சாவர்க்கரை பிரிட்டிஷ்காரர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதும்படி காந்திதான் அறிவுறுத்தினார் என மத்திய அமைச்சர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இன்று வரை இருந்து வருபவர் சாவர்க்கர். இவர் அந்தமான் சிறையில் இருந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கு கருணை மனு அளித்து விடுதலையானது குறித்து தொடர்ந்து இன்றுவரை விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று டெல்லியில் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “சாவர்க்கர் குறித்து பொய்யான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு கருணை மனு எழுதியதை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் அவரை கருணை மனு எழுத சொன்னதே மகாத்மா காந்திதான்” என பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு ஓட்டு போட வேண்டாம் என பிரச்சாரம் செய்த வேட்பாளருக்கு 24 ஓட்டுக்கள்!