இலங்கை அமைச்சர் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை: தமிழில் டுவிட் செய்த ஜெயசங்கர்!
இலங்கை கடல் துறை அமைச்சருடன் நேற்று இந்திய வெளியே துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தமிழர்கள் நலன் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சிறந்த சந்திப்பொன்று நடைபெற்றது. மீனவர்களின் விவகாரங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.
வடபகுதியில் உள்ளவை உட்பட பல்வேறு மீன்பிடி துறைமுகங்களின் அபிவிருத்திக்காக கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை குறித்து சாதகமான நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுதல் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் இவ்விவகாரத்தைக் கையாள்வதற்காக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.