12 பணிப்பெண்களுடன் மகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பும் தந்தை

புதன், 12 செப்டம்பர் 2018 (14:36 IST)
இந்திய பணக்கார தந்தை ஒருவர் தனது மகளை வெளிநாட்டிற்கு 12 பணிப்பெண்களுடன் அனுப்ப உள்ளார்.

 
இதுதொடர்பாக வெளியான விளம்பர செய்தியில்,
 
கோடீஸ்வரரின் மகள் ஸ்காட்லாந்து செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். கல்லூரியின் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க அவருக்கு உதவி செய்ய 12 ஊழியர்கள் தேவை. வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மகளுக்கு வழங்க வேண்டும்.
 
விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்காக ஆண்டு சம்பளம் ரூ.30 ஆயிரம் பவுண்டுகள். அனுபவம் வாய்ந்த ஊழியர்களை விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்காட்லாந்தில் அவரது மகளுக்காக ஒரு மாளிகையை வாங்கி விட்டார். ஊழியர்களுக்கான சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.28.5 லட்சம் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் எடப்பாடி பழனிச்சாமியும்; பிக் பாஸ் ஐஸ்வர்யாவும்