Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2000 கி.மீ நடந்து வந்து தாயை சந்தித்த மகன் –அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்!

Advertiesment
2000 கி.மீ நடந்து வந்து தாயை சந்தித்த மகன் –அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்!
, புதன், 3 ஜூன் 2020 (12:47 IST)
கொரோனா காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக இன்னலுக்கு ஆளாகும் நிலையில் ஒரு தொழிலாளர் விபரீதமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். இதனால் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். ஆனால் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அவர்கள் நடந்தே செல்ல ஆரம்பித்தனர். இது சம்மந்தமான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான சல்மான் கான் (23) என்ற கட்டிடத் தொழிலாளி பெங்களூருவில் இருந்து நடந்தே சென்று, 2000 கிமீட்டர்களைக் கடந்து தனது தாயை சந்திக்க சென்றுள்ளார். 12 நாட்களுக்குப் பிறகு தனது சொந்த ஊரை அடைந்துள்ளார். இதையடுத்து அவரை அன்போடு வரவேற்று உள்ளம் மகிழ்ந்துள்ளார் அவரது தாயார்.

ஆனால் மகனைப் பார்த்த சந்தோஷம் சில நிமிடங்களுக்கு கூட நீடிக்காமல் வயலருகே கைகால் கழுவ சென்ற சல்மானைப் பாம்பு கடித்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்! – உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு!