குளிருக்கு அடக்கமா சரக்கு அடிக்காதீங்க! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (10:50 IST)
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் மேலும் அதிகரிக்க உள்ள நிலையில் குளிருக்கு இதமாக மதுபானங்கள் அருந்த வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை வேளைகளிலேயே வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் மேலும் பனிமூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் “டிசம்பர் 29 முதல் பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குளிர் மேலும் அதிகரிக்கும். எனவே மக்கள் தேவையின்றி பொது வெளியில் நடமாட வேண்டாம். குளிரை எதிர்கொள்ள வைட்டமின் சி உள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஆல்கஹால் பானங்கள் அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் குளிர்காலங்களில் மக்கள் மதுபானங்களை அருந்த வேண்டாம்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே வழக்கை, மதுரை, சென்னை உயர்நீதிமன்றங்கள் விசாரித்தது ஏன்? கரூர் நெரிசல் வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

வாட்டர்மெலன் திவாகர்லாம் ஒரு ஆளா? பிக்பாஸையே கழுவிய ஆதிரை! - முதல் எலிமினேஷன் யார்?

தாலிபான்கள் வெளிவிவகார அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு.. காபூலில் மீண்டும் இந்திய தூதரகம்?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த 74 வயது தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ: திண்டுக்கல்லில் சர்ச்சை

அடுத்த கட்டுரையில்
Show comments