Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல், மே, ஜூன் 3 மாதங்கள் வெயில் கொளுத்தும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Webdunia
ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (09:42 IST)
ஏப்ரல் மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் வெயில் கொளுத்தும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
ஏப்ரல் மாதம் நேற்று தொடங்கிய நிலையில் தற்போது நாடு முழுவதும் கடுமையான வெயில் அடித்து வருகிறது என்பதும் வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை கடும் கோடை வெயில் இருக்கும் என்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களிலும் கடும் வெப்ப அலை வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு வெப்பம் உக்கரமாக இருக்கும் என்பதால் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

நெல்லை நீதிமன்றம் முன் நடந்த இளைஞர் கொலை.. 5 பேர் கைது..!

இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 480 ரூபாய் உயர்வு..!

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

அடுத்த கட்டுரையில்
Show comments