தேனிலவு கொலையில் கள்ளக்காதல் மட்டும் காரணம் அல்ல.. போலீசார் அதிர்ச்சி தகவல்..!

Mahendran
புதன், 18 ஜூன் 2025 (13:42 IST)
மேகாலயா மாநிலத்திற்கு தேனிலவு சென்ற ராஜா ரகுவன்சி என்ற இளைஞரை அவரது மனைவி சோனம் மற்றும் அவரது காதலர், கூலிப்படையை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது "தேனிலவு கொலை" என பரவலாக அறியப்பட்ட நிலையில், இந்தக் கொலையில் கள்ளக்காதல் மட்டுமே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருந்தது.
 
ஆனால், தற்போது இந்த கொலைக்கு கள்ளக்காதல் மட்டுமே காரணமாக இருக்காது என்றும், வேறொரு முக்கிய காரணம் இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த வழக்கை விசாரித்து வரும் மேகாலயா காவல்துறை, "ராஜா ரகுவன்சியின் கொலையில் காதல் மட்டுமே இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.
 
திருமணம் நடந்த ஒரே வாரத்தில் கணவரை கொலை செய்யும் அளவுக்கு சோனமுக்கு வன்மம் ஏன் அதிகரித்தது என்பதை கண்டறிய வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். 
 
இந்தக் கொலை மேலோட்டமாகப் பார்த்தால் முக்கோணக் காதல் காரணமாக இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக சோனமுக்கு தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது" என்று போலீசார் கூறியிருப்பது, வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments