ஒரு கிலோ மாம்பழம் 8 ரூபாய் மட்டுமே.. மாமரங்களை வெட்டி சாய்க்கும் விவசாயிகள்..!

Siva
புதன், 18 ஜூன் 2025 (12:41 IST)
இந்த ஆண்டு மாம்பழம் மொத்த விலையில் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பலர் மாமரங்களை வெட்டி சாய்ப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த ஆண்டு மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால், ஆசை ஆசையாக வளர்த்த மாமரங்களை விவசாயிகள் வெட்டி அழிப்பதாகவும், அதில் வேறு விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், ஒரு கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகி வருகிறது. இதே போன்ற பிரச்சனை ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டபோது, அங்குள்ள அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் விவசாயிகளின் குரலுக்கு தமிழக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என விவசாயிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
 
ஏற்கனவே, மாம்பழ உற்பத்தி செய்யும் விவசாயிகள் பருவநிலை மாற்றம், நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் எனப் பல்வேறு இன்னல்களை சந்தித்து மாம்பழங்களை விவசாயம் செய்து வரும் நிலையில், தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பதால் பெரும் அதிருப்தியில் உள்ளனர். 
 
மாமரம் இருக்கும் நிலத்தில் வேறு வகையான விவசாயம் செய்ய, மாமரங்களை வெட்டி வருவதாக கூறப்படுவது விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இன்டர்போல் உதவி கோரும் வங்கதேசம்: இந்தியாவுக்கு நெருக்கடி

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments