மேகாலயா மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் திடீரென வாகன விபத்தில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பதும் நாகலாந்து தேசிய மக்கள் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மம்தா பானர்ஜியின் கட்சி இந்த மாநிலத்தில் 56 தொகுதிகளில் போட்டுகிறது.
இந்த நிலையில் நாளை 60 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மேற்கு காரோ மலைப்பகுதியில் வாகன விபத்தில் தேர்தல் அலுவலர் திடீரென உயிரிழந்து உள்ளார்.