Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயாவின் 63%, நாகலாந்தில் 73%.. அதிக வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்?

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (16:23 IST)
மேகாலயா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் மேகாலயாவின் 63 சதவீதமும் நாகலாந்தில் 73 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறும் போது 50 முதல் 60% வாக்குப்பதிவு மட்டுமே நடைபெறும். ஆனால் தற்போது மேகாலயா மற்றும் நாகலாந்தில் 60 முதல் 70 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதல் முறையாக ஓட்டு போடும் இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போடுவதாக கூறப்படுகிறது. அதிக வாக்குப்பதிவு ஆளுஙக்ட்சிக்கு சாதகமா? அல்லது  எதிர்க்கட்சிக்கு சாதகமா என்பது கணிக்க முடியாததாக உள்ளது என்று அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இன்னும் சில மணி நேரங்களில் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் கருத்துக்கணிப்பு வெளியாகும் போது அதிக வாக்குப்பதிவு யாருக்கு சாதகம் என்பது தெரிய வரலாம். 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட அறுபது சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments