Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காப்பாற்றிய குழந்தைக்கு பரிசுத் தொகையைப் பகிர்ந்த மயூரா

Advertiesment
காப்பாற்றிய குழந்தைக்கு பரிசுத் தொகையைப் பகிர்ந்த  மயூரா
, வியாழன், 22 ஏப்ரல் 2021 (18:31 IST)
மஹாராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றிய ஊழியருக்கு கிடைத்த பரிசை அவர் அந்தக் குழந்தைக்கே கொடுத்து மக்கள் மனதை வென்றுள்ளார்.
 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சராகத்திற்குட்பட்ட வங்கனி ரயில்வே நிலையத்தில் இரண்டாவது ப்ளாட்பாரத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை நடந்து சென்று கொண்டிருந்தபோது குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளது. உடனே என்ன செய்வதென்று தெரியாமல் அந்த பெண் திகைத்து நின்ற நிலையில் தண்டவாளத்தில் ரயிலும் கிட்ட நெருங்கிவிட்டது.

இந்நிலையில் தண்டவாளத்தில் வேகமாக ஓடிவந்த ரயில்நிலைய பணியாளர் மயுர் ஷெல்கே மின்னல் வேகத்தில் விரைந்து குழந்தையை மேலே தூக்கி விட்டதுடன், ரயில் தன் மீது மோத இருந்த சில வினாடிகளுக்குள் தாவி மேலே ஏறி தப்பித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோவை மத்திய ரயில்வே ட்விட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ஊழியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இந்த உணர்ச்சிப் பூர்வமான வீடியோ காட்சியை இணையதளத்தில் பார்த்த ஜாவ பைக் நிறுவனத்தின் இயக்குநர் தாரிஜா, ஒரு புதிய ஜாவா பைக்கை ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்கு அளிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மயூர், தனக்கு கிடைத்துள்ள பரிசுத்தொகையில் ஒரு பகுதியை அக்குழந்தைக்குக் கொடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

அவரது இந்த மனிதநேயம் மிக்க செயலும் அன்பும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி மக்கள் மனதை வென்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைய வேண்டாம்: தமிழக அரசு