உத்தர பிரதேசம் மாநில முன்னாள் முதல்வர் மற்றும் பகுஜன் சமாதி கட்சியின் தலைவர் மாயாவதி கடந்த ஐந்து மாதத்திற்கு முன் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த் என்பவரை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார். இந்த நிலையில் ஆகாஷ் ஆனந்த் கட்சி பொறுப்பிலிருந்து திடீரென நீக்கி மாயாவதி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த செய்தி உத்தரப்பிரதேச மாநில ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து மாயாவதி விளக்கம் அளித்துள்ளார். அதில் ஆகாஷ் ஆனந்த் இன்னும் அரசியலில் முதிர்ச்சி அடையவில்லை என்றும் அதுவரை அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும் கட்சியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் ஆகாஷ் தந்தை ஆனந்தகுமார் வழக்கம் போல் கட்சியில் உள்ள தனது பொறுப்பை தொடர்ந்து செய்வார் என்றும் இது ஒரு நபருக்கான கட்சி அல்ல என்றும் இது ஒரு மக்களுக்கான இயக்கம் என்றும் இந்த இயக்கத்திற்காக நாங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்
இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல இளைய தலைமுறை உருவாக்கப்பட்டு வருகிறது என்றும் அதன் அடிப்படையில் தான் ஆகாஷ் ஆனந்த் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் எனது அரசியல் வாரிசாகவும் அறிவிக்கப்பட்டார் என்றும் ஆனால் அதே நேரத்தில் இன்னும் அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்பதால் தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.