Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானைக்கு விழுந்த வாக்குகள் தாமரைக்கு போய்விட்டது: மாயாவதி பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (19:19 IST)
வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக யானை சின்னத்தில் விழுந்த வாக்குகள் எல்லாம் தாமரை சின்னத்திற்கு போய்விட்டதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
 
நேற்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் ஒருசில வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து கோளாறுகள் சரிசெய்யப்பட்டு பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு நடந்தது
 
இந்த நிலையில்  வாக்குப்பதிவின் போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறானதால், யானை சின்னத்தில் பதிவான வாக்குகள், பாஜகவின் தாமரை சின்னத்திற்கு போய்விட்டதாக மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
மேலும் அடுத்து வரும் 6 கட்ட தேர்தல்களில் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்தை அவர் எச்சரித்துள்ளார். அதேபோல் வாக்கு பதிவாகும் மையங்களை தனது கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments