Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக – காங்கிரஸ் ரகசிய கூட்டணி – மாயாவதி குற்றச்சாட்டு !

Advertiesment
பாஜக – காங்கிரஸ் ரகசிய கூட்டணி – மாயாவதி குற்றச்சாட்டு !
, வெள்ளி, 3 மே 2019 (10:26 IST)
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸும் பாஜகவும் ரகசிய உடன்படிக்கை செய்துகொண்டு எங்களுக்கு எதிராக  வேட்பாளர்களை நிற்கவைத்துள்ளனர் என மாயாவதிக் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் மாயாவதியும் அகிலேஷ் யாதவ்வும் தங்கள் பழையப் பகைகளை மறந்து கூட்டணி அமைத்துள்ளனர். இங்கு பாஜகவும் காங்கிரஸும் ரகசியக் கூட்டணி அமைத்து எங்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றனர் என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. ஆனால் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகள் வெற்றிப்பெறக்கூடாது என காங்கிரஸ் நினைக்கிறது. இருக் கட்சிகளுக்கும் இடையே ரகசியக் கூட்டணி தெளிவாகியுள்ளது. இருக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து எங்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

பாஜக அம்பேத்கர் பெயரை சொல்லி அரசியல் செய்கிறது. ஆனால் அம்பேத்கர் எங்கள் கட்சியின் ஆன்மா. உ.பி.யில் பாஜக லாபமடையும் வகையில் சாதி ரீதியாக வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. சாதி, மதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்துக்கு வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோட்ட நம்பிதான் அதிமுக ஆட்சி; ஓட்ட நம்பி இல்ல: முன்னாள் அமைச்சர் விளாசல்