பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக புகழ் பெற்று வரும் நிலையில் இந்தியாவில் முதன்முதலில் முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் ரயில்நிலையம் என்ற பெருமையை மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மட்டுங்கா என்ற புறநகர் ரயில்நிலையம் பெற்றுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதல் இந்த ரயில் நிலையத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ரயில்வே காவலர்கள், சிக்னல் பிரிவு ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என அனைத்து துறைகளிலும் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே இந்த ரயில் நிலையத்தில் பணியாற்றுகின்றனர்.
மொத்தம் 41 பெண் ஊழியர்கள் பணியாற்றும் இந்த ரயில் நிலையம் தற்போது லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகள் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளனர்