Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்களின் விலையும் உயர்வு! – விலை உயர்வை சந்திக்கிறதா இந்தியா?

கார்களின் விலையும் உயர்வு! – விலை உயர்வை சந்திக்கிறதா இந்தியா?
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (17:57 IST)
இந்தியாவில் பொருளாதார மந்தநிலை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தொடர்ந்து பொருட்களுக்கான விலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் பலவீனமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ மொபைல் துறை பயங்கர வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் பல தற்காலிக பணியாளர்களை மோட்டார் நிறுவனங்கள் பணியிலிருந்து நீக்கின. தொடர்ந்து ஐடி துறையிலும் வேலையிழப்பு தொடர்ந்து வருகிறது.

நாட்டின் ஜிடிபி மதிப்பு பெரும் சரிவை கண்டுள்ள இந்த சமயத்தில் நவீன பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டு வருகின்றன. மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியுள்ள நிலையில், மாருதி நிறுவனம் தங்கள் கார்களுக்கான விலையை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் அமலுக்கு வரும் இந்த விலையேற்ற விலைப்பட்டியல் கார் மாடல்களுக்கு ஏற்ப மாறுபடும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மேலும் பல ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் விலையை அதிகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து இப்படி நாட்டின் பல பொருட்களின் விலையும் அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிதந்து வந்த சூட்கேஸ்... ப்ளாஸ்டிக் கவரில் கிடந்த ஆணின் உடல் பாகங்கள்...