Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடனுக்கு மேல் கடன்; முத்ரா கடன்! – ஆர்.பி.ஐ துணை கவர்னர் கவலை!

Advertiesment
கடனுக்கு மேல் கடன்; முத்ரா கடன்! – ஆர்.பி.ஐ துணை கவர்னர் கவலை!
, புதன், 27 நவம்பர் 2019 (20:37 IST)
பாஜக அரசின் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள் திரும்ப செலுத்தப்படாததால் வங்கிகள் நிதி நெருக்கடிக்கு ஆளாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2015ம் ஆண்டு மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சிறு-குறு தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மேம்படுத்தி கொள்ள உதவும் வகையில் இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2018 -19ம் நிதியாண்டில் மட்டும் இந்த கடன் திட்டத்தின் மூலம் வங்கிகளில் 3 லட்சத்து 11 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் மிக குறைந்த அளவிலேயே திரும்ப செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் செயல்பட்டு வந்த வங்கிகள் இந்த முத்ரா கடன் திட்டத்தால் மேலும் அதளபாதாளத்துக்கு செல்லும் ஆபத்து உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்பிஐ துணை கவர்னர் எம்.கே.ஜெயின் “முத்ரா திட்டத்தால் பலர் பயனடைந்தாலும் வாராக்கடன் அதிகரித்துள்ளது. எனவே கடன் பெறுபவர்களின் திரும்ப செலுத்தும் திறன் குறித்து வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’800 ரூபாய்’ குர்தாவுக்கு ஆசைப்பட்டு....’ 80 ஆயிரம்’ பணத்தை இழந்த பெண் !