ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கும் சென்றடைகிறதா என அனைத்து எம்.எல். ஏக்களும் வீடு வீடாகச் சென்று மக்கள் பிரச்சனை தீர்க்க வேண்டுமென முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல என்ற கிராமத்திற்குச் சென்று அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் ஒரு முதியவரின் வீட்டிற்குச் சென்று அரசு பென்சன் திட்டம் முறைப்படி கிடைக்கிறதா எனக் கேட்டார். அதற்கு அந்த முதியவர் பென்சன் மட்டும் கிடைக்கிறது மற்ற திட்டங்கள் எதுவும் கிடைப்பதில்லை எனத் தெரிவித்தார்.
பின்னர், உங்கள் மனைவி, குழந்தைகள் எங்கே எனக் கேட்டார். அதற்கு முதியவர், அதுதான் எனக்குப்பிரச்சனை உடனே எனக்கு ஒரு திருமணம் செய்து வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
இதைக் கேட்ட நடிகை ரோஜா முதற்கொண்டு மக்கள் அனைவரும் சிரித்தனர்.