Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர்- பிரதமர் மோடி

இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர்-  பிரதமர் மோடி
, வியாழன், 16 ஜூலை 2020 (16:33 IST)
இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி இளைஞர்களுக்காக பேசின பிரதமர் மோடி திறமைகளை பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாக கருதக்கூடாது என கூறினார்.
 
உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி மக்களுக்கு உரையாற்றியுள்ள பிரதமர் மோடி ”கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் பலர் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த நாள் உங்கள் திறமைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகான உலகில் புதிய சவால்கள் நமக்கு காத்துள்ளது.
 
இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். பணம் ஈட்ட மட்டுமே திறன்கள் என எண்ணாதீர்கள். ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகள் எதையும் விட்டுவிட கூடாது” என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்., இதற்கு லைக்குள் குவிந்து வருகின்றது. எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான மாலன் எழுதிய கட்டுரையைச் சுட்டிக் காட்டி பிரதமர் டுவீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதற்கு முன் சீனா ராணுவம் லடாக்கில் உள்ள  இந்தியக் கல்வான் பகுதியில் ஊடுருவியதாக சர்ச்சை எழுந்த நிலையில் நம் நாட்டு எல்லை ராணுவ வீரர்களிடம் உரை ஆற்றிய பிரதமர் மோடி, 
 
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு (குறள் எண்: 766) என்ற திருக்குறளைச் சுட்டிக் காட்டிப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் சினிமா தியேட்டர்களைத் திறக்க வாய்ப்பு?