Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர். கவர்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு

Advertiesment
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர். கவர்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு
, திங்கள், 13 மார்ச் 2017 (04:37 IST)
கோவா மாநில முதல்வராக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பார்க்கர் அதிகாரபூர்வமாக கவர்னர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இன்னும் ஒருசில நாட்களில் ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவா மாநிலத்தில்  காங்கிரஸ் 17 தொகுதிகளையும் பாஜக 13 தொகுதிகளையும் வென்றுள்ளன. பிற கட்சிகள் 10 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. மொத்தம் 40 தொகுதிகள் உள்ள இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 21 எம்.எல்.ஏக்கள் எந்த கட்சிக்கும் இல்லை என்பதால் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டது.

இந்நிலையில் தன்னை ஆட்சி அமைக்க வருமாறு மனோகர் பாரிக்கர் கவர்னரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மனோகர் பாரிக்கரை கோவா முதல்வராக அம்மாநில ஆளுநர் நியமனம் செய்து உத்தரவிட்டதோடு, இன்னும் 15 நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கோவா முதல்வராக மனோகர் பாரிக்க பொறுப்பு ஏற்கவிருப்பதை அடுத்து அவர் விரைவில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு எம்.எல்.ஏக்கள் 12ஆக உயர்வு