Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு எம்.எல்.ஏக்கள் 12ஆக உயர்வு

Advertiesment
, திங்கள், 13 மார்ச் 2017 (04:06 IST)
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியில் ஏற்கனவே 11 எம்.எல்.ஏக்களும், 12 எம்பிக்களும் ஆதரவாக உள்ள நிலையில் மேலும் ஒரு எம்.எல்.ஏ அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.




கூவத்தூரில் இருந்து தப்பி சென்றவரும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தவ்ருமான கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் நேற்று ஓபிஎஸ் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் அவருக்கு ஆதரவு கொடுக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் நேற்று திருவெற்றியூரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய  அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் விரைவில் தங்களின் அணிக்கு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின்னர் இன்னும் ஒருசில எம்.எல்.ஏக்கள் அணி மாறுவார்கள் என்று ஓபிஎஸ் அணியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா எனக்கு தாய் போன்றவர். 1 மணி நேர தியானத்திற்கு பின்னர் தீபா பேட்டி