Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிஎஸ்டி அமல் – அருண் ஜெட்லிக்கு மன்மோகன் சிங் விருது !

ஜிஎஸ்டி அமல் – அருண் ஜெட்லிக்கு மன்மோகன் சிங் விருது !
, சனி, 16 மார்ச் 2019 (15:27 IST)
ஜி எஸ் டி அமல்படுத்தியதற்காக சேஞ்ச் மேக்கர் ஆஃப் த இயர் என்ற விருதை அருண் ஜெட்லிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே வரி என்ற ஜி எஸ் டியை கடந்த ஆண்டு பாஜக அரசு அமல்படுத்தியது. இதனால் நாட்டில் சிறு மற்றும் குறு வியாபாரிகளும் சில்லறை வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஜி எஸ் டி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முதன் முதலில் கூறிய காங்கிரஸும் ஜிஎஸ்டி தவறான முறையில் அவசர கதியில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், வரி விதிப்பு நிலைகள் ஏற்கத்தக்கதாக இல்லை எனவும் கூறி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரம், மன்மோகன் உள்ளிட்டோர் இது தொடர்பாக பாஜக வைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனால் பிசினஸ் லைன் ஊடகத்தின் சார்பில் ’சேஞ்ச் மேக்கர் ஆஃப் தி இயர்’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய நிதியமைச்சர் அருன் ஜெட்லிக்கு ஜி எஸ் டி யை அமல்படுத்தியதற்காக சேஞ்ச் மேக்கர் ஆஃப் த இயர் என்ற விருதை வழங்கியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதனால் காங்கிரஸ் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் விருதை அளித்த பின்னர் பேசிய மன்மோகன் சிங் ’ சர்வாதிகாரப் போக்குடன், மாற்றங்களைத் திணிக்க முடியாது ‘ எனப் பாஜக அரசை விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலேஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆதாரத்துடன் சிக்கிய கார் டிரைவர்!